←
காமம் அகற்றிய
☽
காமம் அகற்றிய தூயன் அவன்
சிவகாம செளந்தரி நேயன் அவன்
மாமறை ஓதும் செவ்வாயன் அவன்
மணிமன்றம் எனும் ஞானஆகாயன் அவன்
கல்லை கனிவிக்கும் சூட்சன் அவன்
முடி கங்கை கருளிய கர்த்தன் அவன்
தில்லைச்சி தம்பர சித்தன் அவன்
தேவ சிங்கம் டியுயர் தங்கம் அவன்
அம்பலத் தாடல்செய் ஐயன் அவன்
அன்பர் அன்புக் கெளிதரு மெய்யன் அவன்
தும்பை முடிக்கணி தூயன் அவன்
சுயஞ் சோதி அவன் பரஞ் சோதி அவன்
சிவசங்கரனை பணிந்தாடுவோம்
புகழ் பாடுவோம் தினமே!!
1
14